உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுகவின் இந்தி நோட்டீஸ்: காரணம் அவர் தானாம் | DMK | Erode East | Erode Election

திமுகவின் இந்தி நோட்டீஸ்: காரணம் அவர் தானாம் | DMK | Erode East | Erode Election

ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பிப்ரவரி 5ல் நடக்க உள்ள இடைதேர்தலில் இவர்களது ஓட்டை பெற திமுகவினர் இந்தியில் நோட்டீஸ் அடித்து விநோயோகித்தனர். நோட்டீஸில் ”ஹமாரா நேத்தா ஸ்டாலின் ஹை; ஹமாரா சுரக்ஷா டீயெம்கே ஹை” என்று வேட்பாளர் சந்திரகுமார், ஸ்டாலின் போட்டோ போடப்பட்டிருந்தது. மேலும், இந்தி பேசும் வட மாநில உடன்பிறப்புகளே, உங்களின் காவலன் திமுக தான் என்று கவர்ச்சியாக பேசி திமுகவினர் ஓட்டு சேகரித்தனர். இந்தி தெரியாது போடா என்று சொல்லி வந்த திமுகவினர், இவர்களின் ஓட்டுகளை பெற இந்தியில் பிரசாரம் செய்தது சர்ச்சையானது. இதனால் பதறிப்போன திமுக வேட்பாளர் சந்திரகுமார் இந்தி நோட்டீஸ் குறித்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஜன 31, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை