திமுக நிர்வாகி உள்பட இருவர் கைது; ₹84 லட்சம் பறிமுதல் | DMK | Fraud | Cheating | MLA Seat | Theni DM
ேனி பெரியகுளத்தை சேர்ந்தவர் திமுக கவுன்சிலர் சுதா. இவரது கணவர் நாகலிங்கம். சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தார். இவரிடம் திமுக தலைமை கழகத்திலிருந்து பேசுவதாக ஆசிப் ராஜா என்பவர் அறிமுகமாகி உள்ளார். எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக நாகலிங்கத்திடம் 3 கோடி பேரம் பேசியுள்ளார். அவர் கூறியபடி முதல் கட்டமாக 1 கோடியை சென்ற 3ம் தேதி அபுதாஹிர் என்பவரிடம் நாகலிங்கம் கொடுத்தார். இவர் ஓபிஎஸ் ஆதரவாளர் என தெரிகிறது. அந்த பணத்தை ஆசிப் ராஜா அறிவுரைப்படி திமுக நிர்வாகி கார்த்தியிடம் அபுதாஹிர் கொடுத்துள்ளார். தேனியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களை நேர்காணலுக்கு அழைத்தனர். இதில் நாகலிங்கத்துக்கு அழைப்பு வராததால் சந்தேகம் அடைந்தார். முறையான பதில் வராததால் தான் ஏமாற்ற பட்டதை உணர்ந்தார். பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது மறுத்துள்ளனர். பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் கொடுத்தார். தலைமை கழக நிர்வாகி போல் நடித்து மோசடி செய்த ஆசிப் ராஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார்த்தியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அபுதாஹிரை தேடி வருகின்றனர். ஆசிப் ராஜா வீட்டில் வைத்திருந்த 84 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. #DMK | #Fraud | #Cheating | #MLASeat | #TheniDMK | #MLACandidates | #2026Election | #PeriyakulamDMK | #OPS | #CMStalin | #DMKCounsilor