உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தனி ஆளாக திமுக கூட்டத்தை பந்தாடிய பெண் | DMK | Hindi Notice | Tiruvallur

தனி ஆளாக திமுக கூட்டத்தை பந்தாடிய பெண் | DMK | Hindi Notice | Tiruvallur

விழாவின் போது திமுக தொண்டர்கள் ரோட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதையடுத்து இந்தி திணிப்பு எதிராக பொதுமக்களிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ் ராஜ், கும்மிடிபூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜ் நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது நோட்டீஸ் வாங்க மறுத்த பெண் ஒருவர் கட்சியினரை கடுமையாக விமர்சித்தார். உங்க கட்சி ஆளுங்க ரோட்டில் பட்டாசு வெச்சு இருக்காங்க. யார் வராங்கன்னு கூட பார்க்கல பட்டாசு வெடிச்சு ஏதாவது ஆகிருந்தா உயிருக்கு யார் பொறுப்பு? இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா? என வெளுத்து வாங்கினார்.

மார் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி