உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய கட்சியினருக்கு அறிவுறுத்தல்! DMK | MK Stalin | 2026 Election

விவரத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய கட்சியினருக்கு அறிவுறுத்தல்! DMK | MK Stalin | 2026 Election

உட்கட்சி பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணவும், அது தொடர்பான அறிக்கையை, அறிவாலயத்தில் ஒப்படைக்கவும், 8 மண்டல பொறுப்பாளர்களுக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க.வில் 76 மாவட்ட செயலர்கள் உள்ளனர். இவர்களை தவிர, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு அமைச்சர்களும், 234 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும், தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க, லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் சட்டசபை தொகுதிவாரியாக பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு மாவட்டச் செயலர், ஒரு பொறுப்பு அமைச்சர், ஒரு தொகுதி பொறுப்பாளர், ஒரு மண்டலப் பொறுப்பாளர், ஒரு கண்காணிப்பாளர் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் என, தேர்தல் பணிகளை கவனிக்கும் நிர்வாகிகள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை தவிர்த்து, தொகுதிவாரியாக உள்ள குறைகளை களையவும், நிர்வாகிகளை உற்சாகப்படுத்தவும், உடன்பிறப்பே வா என்ற பெயரில், கட்சி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஸ்டாலின் பேசி வருகிறார். அப்போது தொகுதி நிலவரம் குறித்தும், உட்கட்சி பூசல்கள், மாவட்டச் செயலர், பொறுப்பாளர்கள் மோதல் குறித்தும் ஸ்டாலினிடம் புகார் தெரிவித்து வருகின்றனர்.

நவ 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி