உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நெல்லை திமுக நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு | DMK | Nellai | Petrol | Bomb

நெல்லை திமுக நிர்வாகி வீட்டில் குண்டு வீச்சு | DMK | Nellai | Petrol | Bomb

திருநெல்வேலி, கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்தவர் செல்வசங்கர் (45). இவர் பாளை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளராக உள்ளார். இவரது மனைவி சரஸ்வதி. பாளை யூனியன் கவுன்சிலர். இவர் வீட்டின் முன் இன்று அதிகாலை 5 மணி அளவில் பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே வீட்டில் இருந்தவர்கள் பதறி அடித்து கொண்டு வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தண்ணீரை ஊற்றி அணைத்தனர். அருகில் சென்று பார்த்தபோது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரிந்தது. முன்னீர்பள்ளம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 4 பேர் கொண்ட கும்பல் டூவீலரில் வந்து பெட்ரோல் குண்டு வீசியது தெரிந்தது. மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மே 14, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி