திண்டுக்கல் திமுகவினரை அதிர வைக்கும் சம்பவம் | DMK | Police | crime news
ஒரு கை எங்கே போனது? கோரமாக சரிக்கப்பட்ட திமுக நிர்வாகி வீடு திரும்பும் வழியில் நடந்த கொடூரம்! திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள குன்னம்பட்டியை சேர்ந்தவர் மாசி, வயது 40. வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக உள்ளார். இவரது மனைவி முத்துமாரி நாகம்பட்டி ஒன்றிய கவுன்சிலராக இருக்கிறார். இரவு பெருமாள் கவுண்டன்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு பைக்கில் சென்றார் மாசி. தோட்டத்துக்கு சென்றுவிட்டு குன்னம்பட்டி திரும்பும் வழியில் சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் மாசி பைக்கை மறித்துள்ளனர். சராமாரியாக அறிவாளால் வெட்டியுள்ளனர். பைக்கை கீழே போட்டு தப்பி ஓடியுள்ளார் மாசி. துரத்தி சென்ற கும்பல் அவரது கை, கழுத்தில் பலமாக வெட்டியது. இதில் மாசியின் ஒரு கை துண்டாகி தனியே விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் துடிதுடித்து இறந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். வேடசந்தூர் போலீசர் மாசியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை நடத்த அனுப்பி வைத்தனர். வேடசந்தூர் ஆஸ்பிடல் முன் மாசியின் உறவினர்கள் மறியல் செய்தனர்.