உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாரில் பாக்கெட் சாராயம் விற்கும் திமுகவினர் | DMK | TASMAC | Kalla Sarayam | Salem

பாரில் பாக்கெட் சாராயம் விற்கும் திமுகவினர் | DMK | TASMAC | Kalla Sarayam | Salem

சரக்கு தர! வீடியோலாம் எடுக்காதீங்க! அண்ண திமுகலா இருக்காரு தெரியுமா? சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. இதனருகே உள்ள பாரில் 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு சரக்கு, பாக்கெட் சாராயம் விற்பனை ஜோராக நடக்கிறது. அப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் சட்டவிரோத மதுவிற்பனையை வீடியோ எடுக்க சென்றனர். அப்போது பாரில் இருந்த ஊழியர்கள் திமுகவை சேர்ந்த கல்லாநத்தம் ஜோதிவேல், பாலு தான் கடை வைத்துள்ளனர். போலீசாருக்கு மாமூல் கொடுத்து தான் கடை நடத்துகிறோம். உங்களுக்கு தேவையானதை கொடுக்கிறோம் என்றனர். பாக்கெட் சாராயம் விற்கப்படும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சேலம் கூடுதல் எஸ்பி பாலகுமார் தலைமையில் ஆத்துார் ஊரகம், மதுவிலக்கு போலீசார் அங்கு விரைந்தனர். டாஸ்மாக் திறப்பதற்கு முன்பே பாரில் மது விற்பனை நடப்பது விசாரணையில் தெரியவந்தது. சாராய விற்பனையில் ஈடுபட்ட சக்திவேல், சுரேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், கல்லாநத்தம் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஜோதிவேல், ஆத்துார் நகராட்சி 18வது வார்டு திமுக கவுன்சிலர் கங்கையம்மாளின் கணவரும், வார்டு செயலருமான ரவி கைது செய்யப்பட்டனர். தலைமறைவான ஆத்தூர் திமுக 26வது வார்டு செயலர் இளங்கோ மன்னனை போலீசார் தேடுகின்றனர்.

பிப் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை