உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக நிர்வாகி மீது பேரூராட்சி அதிகாரி ஆத்திரம் | DMK | Tirupattur Sivagangai

திமுக நிர்வாகி மீது பேரூராட்சி அதிகாரி ஆத்திரம் | DMK | Tirupattur Sivagangai

போலீஸ் ஸ்டேஷனுக்குள் வைத்து திமுக நிர்வாகி மண்டை உடைப்பு சிவகங்கை, திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி. கணவர் நாராயணன் அதே பேரூராட்சியில் 5வது வார்டு கவுன்சிலர் கோமதி. கணவர் சண்முகம். இவர்களுக்கும், பேரூராட்சி முன்னாள் செயல் அலுவலர் தனுஷ்கோடிக்கும் மோதல் இருந்தது. இருதரப்பும் மாறி மாறி போலீசில் புகார் கொடுத்தனர். தனுஷ்கோடி கடலூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். இந்த நிலையில், ஏற்கனவே உள்ள வழக்கு விசாரணைக்காக அவர் திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வந்தார். பேரூராட்சி சேர்மன் தரப்பும் அங்கு வந்தனர். நாராயணன், சண்முகம், அதிகாரி தனுஷ்கோடியிடம் விசாரணை நடந்தது. அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. ஆத்திரமடைந்த தனுஷ்கோடி, இன்ஸ்பெக்டர் டேபிளில் இருந்த பேப்பர் வெயிட்டை எடுத்து சண்முகம் மண்டையில் போட்டார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. திருப்பத்தூர் அரசு ஆஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சண்முகத்தை தாக்கிய அதிகாரி தனுஷ்கோடி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். தாக்குதலில் காயமடைந்த சண்முகம் திருப்பத்தூர் திமுக நகர துணைச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை