அதிமுகவுடன் சேரலாம்: மனம் திறந்த திருமாவளவன் | DMK | VCK | ADMK | Thirumavalavan
2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் எப்படியாவது இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெற்றுவிடும் என்ற ஆவலில் விசிகவினர் உள்ளனர். கடைசியாக 2006ல் அ.தி.மு.கவிடம் 9 தொகுதிகளை பெற்றது விசிக. 20 ஆண்டுகளாகியும் கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை பெற முடியாமல் தவித்து வருகிறது. இந்நிலையில் 2021 தேர்தலில் பெற்றது போல 6 தொகுதிகள் போதாது. வரும் தேர்தலில் 15 தொகுதிகள் வரை திமுகவிடம் கேட்போம் என விசிக தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார். சட்டசபை தேர்தல் நெருங்கி கொண்டு உள்ளது. விடுதலை சிறுத்தைகள் இந்த தேர்தலில் மிக முக்கிய துருப்புச்சீட்டாக உள்ளது. தினமும் நம்மிடம் தேர்தல் குறித்து கேள்வி கேட்கின்றனர். எத்தனை சீட் கேட்க போகிறீர்கள்? கிடைக்காவிட்டால் என்ன செய்வீர்கள்? அடிக்கடி தி.மு.க., உடன் விரிசல் வருகிறதே? என கேட்கின்றனர். கருணாநிதி, எங்கள் கூட்டணிக்கு வைத்த பெயர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி. அதனால் தான், இன்றைக்கும் நாங்கள் தி.மு.க., பின்னால் நிற்கிறோம். சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் எதுவானாலும் மதசார்பின்மையை உயர்த்தி பிடிப்போம்.