உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: திருவண்ணாமலையில் திக்...திக்...

திமுக எம்பி அண்ணாதுரை வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: திருவண்ணாமலையில் திக்...திக்...

#dmkAnnadurai #RaidatDMkMPhouse #VigilanceRaid #DMK #TVK #TNGovernment #CNAnnadurai திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திமுக முக்கிய புள்ளிகளில் ஒருவர் அண்ணாதுரை. 2019 லோக்சபா தேர்தலில் திருவண்ணாமலையில் போட்டியிட்டு எம்பியானார். தொடர்ந்து 2024 தேர்தலிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக பார்லிமென்ட்டுக்கு சென்றார். திமுக சிட்டிங் எம்பியான அண்ணாதுரை, தமிழகத்தில் கடந்த முறை திமுக ஆட்சி நடந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தப் பணிகளை எடுத்து செய்தார். அதில் சில முறைகேடுகள் நடந்ததாகவுகம், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. திமுக ஆட்சியின் போது, திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற கட்சி மாநாட்டிற்காக ஆற்றில் முறைகேடாக மணல் அள்ளிதாகவும் சில தரப்பினர் அண்ணாமலை மீது புகார் எழுப்பினர். அண்ணாதுரை மீதான அடுத்தடுத்த புகார்களை அடுத்து, வேங்கிக்காலில் உள்ள அவரது வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில், இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வேலுார் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து வந்த இரு வேறு குழு அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டதால், திருவண்ணாமலையில் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாதுரையின் பூர்விக வீடு, அவர் வசிக்கும் வீடு, அவருக்கு சொந்தமான அலுவலகம் என ஒரே நேரத்தில் பல இடங்களில் ரெய்டு நடப்பதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. ரெய்டு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா என்பது தெரிய வரும். ஏற்கனவே, திமுக முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, மகேஷ் உள்ளிட்டோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடந்த நிலையில், அடுத்ததாக திமுக சிட்டிங் எம்பி வீட்டில் ரெய்டு நடப்பது திமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செப் 25, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி