உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திமுக கவுன்சிலர் செயலால் டென்ஷன் ஆன போலீஸ் DC Dmk councillor |Trichy police |Iswaran DC |

திமுக கவுன்சிலர் செயலால் டென்ஷன் ஆன போலீஸ் DC Dmk councillor |Trichy police |Iswaran DC |

திருச்சி எடமலைபட்டிபுதூர் 57வது வார்டு நல்லகேணி தெருவில் கடந்த மாதம் சிமென்ட் சாலை போடும் பணி நடந்தது. அந்த தெருவை சேர்ந்த முத்தையன், வீட்டருக்கே ஒரு போர்டு வைத்திருந்தார். அதில், எனது நிலத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என எழுதியிருந்தது. சாலைபோட வசதியாக அந்த போர்டை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதை முத்தையனின் மகள் தட்டி கேட்டார். இதனால் அவருக்கும் திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்துக்கும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த கவுன்சிலர், அந்த பெண்ணை தாக்க பாய்ந்ததாக கூறப்படுகிறது. உடன் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். திராவிட மாடல் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற தலைப்பில் கவுன்சிலர் முத்துசெல்வத்தின் வீடியோ சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது. அதே வீடியோ மீண்டும் பரப்பப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் முத்துச்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். போக்குவரத்து பாதித்தது. திமுக கவுன்சிலர் முத்துச்செல்வத்திடம், போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் சமாதானம் பேசினார். என்னிடம் சொல்லி இருக்கலாமே, இவ்வளவு பேரை ஏன் கூட்டி வந்தீர்கள் என துணை கமிஷனர் கேட்க, கவுன்சிலர் முத்துச்செல்வம் அவரிடம் எகிறினார். அவர் வரம்பு மீறியதால் கவுன்சிலரை துணை கமிஷனர் ஈஸ்வரன் எச்சரித்தார். அப்போது, திமுக கவுன்சிரல் முத்துச்செல்வம் அடிப்பீங்களா, அடிப்பியா, அடிப்பியா, அடிச்சுப்பாரு என கோபத்துடன் எகிறிதால் பரபரப்பு ஏற்பட்டது. நுண்ணறிவு பிரிவு போலீஸ் உதவி ஆணையர் ஸ்ரீதர் தலையிட்டு கவுன்சிலர் முத்துச்செல்வத்தை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றார். அதன் பிறகு அங்கு கூடி இருந்தவர்களை போலீசார் கலைந்து போகச் செய்தனர்.

ஏப் 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை