உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் DMK government sanitation workers protest

மாநகராட்சியை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் DMK government sanitation workers protest

சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ளன. ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய 2 மண்டலங்களில் தூய்மைப்பணி ராம்கி எனும் தனியாருக்கு வழங்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் தூய்மைப்பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 13 நாட்களுக்கு போராட்டம் நீடித்த நிலையில், நள்ளிரவில் தூய்மைப்பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து போலீசார் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். தனியாரிடம் தூய்மைப்பணியை வழங்கும் முடிவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்து விட்டது. ஆனால், ஊழியர்களின் சம்பளம் குறையாமல் அரசும் மாநகராட்சியும் பார்த்துக்கொள்ள வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. அதன்பிறகு, பல தூய்மைப்பணியாளர்கள் ராம்கி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தனர். தனியாரிடம் வேலைக்கு சேர விரும்பாத பல நூறு ஊழியர்கள், வேலை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர். தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், தங்களுக்கு மாநகராட்சி மீண்டும் வேலை வழங்கக் கோரியும் பல கட்டமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ராயபுரம், திரு.வி.க நகர் மண்டலங்களைச் சேர்ந்த 450க்கு மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இன்று காலை 11 மணியளவில் சென்ட்ரல் அருகே உள்ள சென்னை மாநகராட்சி அலுவலக பின்புற வாயில் வழியாக உள்ளே நுழைந்தனர். உஷாரான போலீசார் அவர்களை குண்டுகட்டாக கைது செய்தது. நூற்றுக்கணக்கான ஊழியர்களை வாசலிலேயே மடக்கியது. அனைவரையும் குண்டுகட்டாக தூக்கிச் சென்று போலீஸ் வாகனங்களில் ஏற்றினர். அப்போது, இரு தரப்புக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மனு கொடுக்க வந்த தங்களை போலீஸ் அராஜகமான முறையில் கைது செய்துள்ளதாக குற்றம்சாட்டினர். வேலை வழங்கும்படி மனு கொடுக்கக்கூட எங்களுக்கு உரிமை இல்லையா? இதுவா திராவிட மாடல், இதுவா சமூக நீதி மன்னராட்சி நடத்தாதீங்க; மக்களாட்சி நடத்துங்க எனவும் கொந்தளித்தனர். இதனால் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு தொலைதூரத்தில் உள்ள திருமண மண்டபங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விடுவித்த பிறகு அவர்கள் மீண்டும் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடக்கூடும் என்பதால் மாநகராட்சி அலுவலக வளாகத்தின் அனைத்து வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #DMK #SanitationWorkers #Protest #RamkyGroup #ChennaiCorporation #JobLoss #WorkersRights #LaborProtest #SocialJustice #TamilNadu #Solidarity #WorkersUnite #HumanRights #EmploymentIssues #GovernmentAccountability #PublicHealth #WasteManagement #ChennaiNews #ProtestForChange #UnionStrong #FightForWorkers #JobSecurity #CivicEngagement #CommunitySupport #VoicesOfWorkers #StandWithWorkers #ChennaiProtest #WorkersStruggle #JusticeForWorkers

அக் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை