₹1000 கோடி மேட்டரில் என்ன நடந்தது? | DMK | Jagathrakshakan
திமுகவில் பணபலம் மிக்க நிர்வாகிகளில் ஒருவர் ஜெகத்ரட்சகன். அரக்கோணம் லோக்சபா தொகுதி எம்பியாகவும் உள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவர். மதுபான ஆலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என இவரது தொழில் சாம்ராஜ்ஜியம் நீள்கிறது. உள்ளூர், அண்டை மாநிலம் தாண்டி வெளிநாடுகளிலும் தொழில் முதலீடு செய்துள்ளார். சிங்கப்பூர், இலங்கையில் கணிசமாக முதலீடு செய்துள்ளார். 2020ல் சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கி முறைகேடு செய்த விவகாரத்தில் சிக்கினார். அப்போது ஜெகத்ரட்சகனுக்குச் சொந்த இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியது. ரெய்டின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சமீபத்தில் அந்நிய செலாவணி சட்ட மீறலின் கீழ் ஜெகத்ரட்சகனுக்கு 908 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.