சப் இன்ஸ்பெக்டரை மிரட்டிய திமுக நிர்வாகி; பரபரப்பு தகவல்கள் Dmk man fight with police officer SSI s
சேலம் லயன்மேடு இறக்கத்தில் 2 வாலிபர்கள் தனித்தனி பைக்கில் பர்தா போட்ட 2 சிறுமிகளை ஏற்றி சென்றனர். ஒரு கடை முன் பைக்கை நிறுத்திய அவர்கள், பர்தாவை கழற்றும்படி சிறுமிகளிடம் கூறினர். இதைக்கண்ட கடைக்காரர்கள் போலீசுக்கு தகவல் சொல்லவே, எஸ்.ஐ. மணிகண்டன் சம்பவ இடத்துக்கு வந்தார். யார் அந்த சிறுமிகள் என வாலிபர்களிடம் விசாரணை நடத்தினார். தங்கச்சி சார்; ரிலேட்டிவ் சார்? என வாலிபர்கள் கூறினர். 2 வாலிபர்களையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று விசாரிக்க எஸ்ஐ மணிகண்டன் முடிவு செய்தபோது, அப்பகுதி திமுக கவுன்சிலர் விஜயாவின் கணவர் ராமலிங்கம் வந்தார். வாலிபர்களுக்கு ஆதரவாக பேசத் துவங்கினார். பொண்ணுங்களோட வாழ்க்கை பிரச்னை; இந்த ஒரு வாட்டி விட்டுடுங்க அடுத்த முறை தப்பு பண்ணா பாத்துக்கலாம் என்றார். இதனால் எஸ்ஐ மணிகண்டனுக்கும் ராமலிங்கத்துக்கும் சண்டை மூண்டது. எங்க ஆட்சியில இப்படியெல்லாம் பேசாதீங்க என ராமலிங்கம் சொல்ல, உங்க ஆட்சின்னா உங்க இஷ்டத்துக்கு பேசுவீங்களா? என எஸ்ஐ மணிகண்டன் பதிலடி கொடுத்தார். உடனே ராமலிங்கம் கம்ப்ளெய்ன்ட் இருக்கா? என கேட்டார். ஆவேசமானார் எஸ்ஐ. 2 பொண்ணுங்கள பைக்குல பர்தா போட்டு கூட்டிட்டு போறாங்கனு தகவல் வந்தா போலீஸ்காரங்க விசாரிக்காம என்ன பண்ணுவாங்க என எஸ்ஐ கேட்டார். இருவரும் மாறி மாறி திட்டிக்கொண்டனர். சண்டையை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில் தேவையில்லாம பேசிட்டோமோ என்கிற ரீதியில் ராமலிங்கம் கொஞ்சம் இறங்கி வந்தார். வாலிபர் பக்கம் திரும்பி, யாருப்பா அந்த பொண்ணுங்க... உண்மையை சொல்லிட்டு போங்கப்பா என கூறி விட்டு வந்த வழியே நடையை கட்டினார். சிறுமிகளை பைக்கில் அழைத்துச் சென்ற 2 வாலிபர்களையும் எஸ்.ஐ மணிகண்டன் செவ்வாய்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார். பப்ளிக் கிட்ட இருந்து கம்ப்ளெய்ன்ட் வரும் அளவுக்கு பொதுஇடத்துல நடக்கக்கூடாது என எச்சரித்து அனுப்பினார்.