/ தினமலர் டிவி
/ பொது
/ குடைபிடித்து காத்திருந்த பெண்கள் புதுசு புதுசா யோசிக்கிறாங்களே! | DMK Meeting | Tenkasi
குடைபிடித்து காத்திருந்த பெண்கள் புதுசு புதுசா யோசிக்கிறாங்களே! | DMK Meeting | Tenkasi
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திப்பனம்பட்டி கிராமத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வந்த பெண்கள் கடைசி வரை சீட்டில் உட்கார்ந்து இருந்தனர். வழக்கமாக பல ஏற்பாடுகள் செய்து கூட்டம் கூட்டினாலும் நிர்வாகிகள் பேசும் போது கூட்டம் காலியாவது வழக்கம். ஆனால் இங்கே மழை பெய்தாலும் இடத்தை விட்டு நகராமல் இருந்தனர். கூட்டம் முடிந்த பின்பும் அரை மணி நேரம் 200க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருந்தனர். கடைசியில் தான் அந்த சஸ்பென்ஸ் உடைந்தது. ஏற்கனவே திட்டமிட்டு டோக்கன் கொடுத்து கூட்டம் கூட்டி உள்ளனர்.
மே 24, 2025