திமுக எம்எல்ஏ மகன் எழுப்பிய கோஷம் என்ன? | CM Stalin | Madurai Airport | DMK | DMK MLA | DMK MLA Son
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், நேற்று மதியம், சென்னை கிளம்ப மதுரை ஏர்போர்ட் வந்தார். அவரை வரவேற்று தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஒருவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நீதிபதி தீர்ப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார். அவரை போலீசார் வேகமாக அழைத்து சென்று ஜீப்பில் ஏற்றினர். நிருபர்கள் என்ன கோஷம் எழுப்பினீர்கள் என கேட்டதற்கு, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத கலவரத்தை துாண்டுகின்றனர் என்றார். போலீசார் அந்த நபரின் வாயை மூடி அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் என்பது தெரிந்தது. டில்லி சட்ட கல்லுாரியில் படிக்கிறார். அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அக்ஷய், தன் தந்தை மார்க்கண்டேயனுடன் விளக்கமளித்தார். #CMStalin | #MaduraiAirport | #DMK | #DMKMLA | #DMKMLASon | #ViralVideo