ஸ்டாலின் வீடியோவை பரப்பி பாஜ கொடுக்கும் பதிலடி | DMK vs BJP | mummozhi kolgai | Hindi imposition
புதிய கல்விக் கொள்கையை உள்ளடக்கிய பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை செயல்படுத்தாவிட்டால், அதற்கான நிதியை வழங்க முடியாது என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியது, தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த திட்டம் ஹிந்தி திணிப்புக்கு வழிவகுக்கும் என்று தி.மு.க., அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்கும்படி கட்டாயப்படுத்தக் கூடாது என்று அ.தி.மு.க., பா.ம.க., போன்ற எதிர்க்கட்சிகளும், மத்திய பா.ஜ., அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. மும்மொழிக் கொள்கையை ஹிந்தி திணிப்பு எனக் கூறி, ஹிந்தி எதிர்ப்பு அரசியலை மீண்டும் தி.மு.க., கையில் எடுத்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஒரு வாரமாக, தொண்டர்களுக்கு தினமும் கடிதம் எழுதி வருகிறார். அதில், ஹிந்தி, சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்ப்போம்; உயிரைக் கொடுத்தாவது தமிழை காப்போம் என குறிப்பிட்டுள்ளார். உ.பி., பீஹாரில் பேசப்படும் போஜ்புரி, மைதிலி, ஆவ்தி போன்ற மொழிகளை, ஹிந்தி விழுங்கி விட்டது என, முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.