அதிமுக நிர்வாகி வழக்கு: 4 பேரை போலீஸ் தேடுகிறது
சேலம் தாதகாப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரும், மாநகராட்சி மண்டலக் குழு முன்னாள் தலைவருமான சண்முகத்தை கடந்த 3ம் தேதி அதே பகுதியில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை சம்பவத்திற்கு பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்தார், அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார். இந்த வழக்கில், சேலம் மாநகராட்சி 55 வது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ், அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், முருகன், பாபு, சீனிவாசன், பூபதி, கருப்பண்ணன் என்கிற சந்தோஷ், கௌதமன், நவீன் உள்ளிட்ட 10 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
ஜூலை 06, 2024