உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கூட்டணிக்கு வேட்டு வெச்சுடாதீங்க விசிக நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

கூட்டணிக்கு வேட்டு வெச்சுடாதீங்க விசிக நிர்வாகிகளுக்கு அட்வைஸ்

திமுக - விசிக கூட்டணி 7 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்கிறது. திமுக ஆட்சியில் அமைந்தபின், 160க்கு மேற்பட்ட விசிக கொடி கம்பங்கள் அகற்றப்பட்டன. புதிய கம்பங்கள் வைக்க போராட வேண்டி உள்ளது. இதேபோல், திமுக மீது விசிகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர். வேங்கை வயல் விவகாரத்தில் திமுக அரசை நிலைப்பாட்டை விசிகவினர் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதியை விமர்சிப்பது விசிக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நிர்வாகிகளிடம் ஆன்லைன் மீட்டிங்கில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் கட்சி வளரும்போது, முன்னணி தலைவர்கள் இடையே முதிர்ச்சி வெளிப்பட வேண்டும். கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்துகளை பகிர்வது வேதனை அளிப்பதாக கூறினார். இச்சூழலில், வரும் சட்டசபை தேர்தலிலும் திமுக கூட்டணியில் விசிக நீடிப்பதால், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் யாரையும் விமர்சிக்க வேண்டாம் அவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்களுக்கு விசிக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றும், இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை எச்சரித்து உள்ளதாக விசிக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி