உங்க ஏரியாவுக்கு இது அதிகம் அதிகாரிகள் அலட்சிய பதில் | Poor Quality Construction | DMK
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு இந்திரா நகர் பகுதியில் தொழுநோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட நிலத்தில் வீடுகள் கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 60க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் உள்ள சாலை பல ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக இருந்தது. மாற்றுத் திறனாளிகள் இந்த சாலையில் செல்லும் போது அடிக்கடி கீழே விழும் சம்பவமும் நடந்துள்ளது. தங்கள் பகுதியில் குண்டும் குழியுமான சாலைக்கு பதிலாக சிமெண்ட் சாலை அமைத்துக் கொடுக்க வேண்டி பொன்னேரி நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை இந்திரா நகர் மக்கள் மனு கொடுத்தனர். ஆனால் இதுவரை அவர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்தது.