2026 தேர்தல் வெற்றிக்காக அதிரடி திட்டங்களுடன் களத்தில் இறங்கிய திமுக | DMK | 2026 elections | Victor
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என்ற இலக்கை முன்வைத்து திமுக பணிகளை தொடங்கி இருக்கிறது. அதில் ஒன்று தான் புதிய மாவட்ட செயலர்கள் நியமனம். சென்னை அறிவாலயத்தில் சமீபத்தில் நடந்த திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் கட்சி மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை சீரமைப்பு பணிகள் பற்றி விவாதித்தனர். மாவட்ட செயலர்களின் அதிகாரத்தை பரவலாக்கும் வகையில், 2 சட்டசபை தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். திமுகவுக்கு தேர்தல் வியூகம் அமைக்கும் பென் நிறுவனம், துணை முதல்வர் உதயநிதி, உளவுத்துறை சார்பில் தலா ஒரு குழு என 3 குழுக்கள் தனித்தனியே, மாவட்ட செயலர் பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. அந்த பணிகள் முடிந்ததும், மூன்றையும் ஒருங்கிணைத்து தகுதியானவர்களை ஸ்டாலின், உதயநிதி தேர்வு செய்ய உள்ளனர். இந்த முறை புதிய மாவட்ட செயலர்களாக, இளைஞர்கள் அதிகம் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.