வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்தவரும், அறிவாற்றல் நிறைந்தவருமான திருச்சி வேலுச்சாமி அவர்கள் “பராசக்தி சிவாஜி” மாதிரி பல இடங்களில் பேசி தரையில் விழுந்து கேட்பாரற்றுக் கிடந்த காங்கிரஸை எழுப்பி நிற்க வைத்திருக்கிறார். காலிப்பெருங்காய டப்பாவான திமுகவின் ஆட்சியைப் புகழ்ந்து ராஜஸ்தானிலிருந்து முதல் தடவையாக சென்னைக்கு வந்த சச்சின் பைலட் சொல்வதை உண்மை என்று நம்புபவர்கள் கேனையர்களாகத் தான் இருப்பார்கள். திமுகவுக்கு ANTI-INCUMBENCY மற்றும் BAD IMAGE இருப்பதால், திமுகவோடு கூட்டணி சேரும் எந்த கட்சியும் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது. தமிழகத்தில் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் ஸ்வயமாகவே போட்டியிடலாம். எந்த கட்சிகளாவது சீட் கேட்டால், 234-லிருந்து எடுத்துக் கொடுக்கலாம். அனைத்து தமிழக மக்களும் இகழும் திமுகவுடன் காங்கிரஸ் செல்வது, வயதான பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு காங்கிரஸ் திருமண மேடையில் அமர்வதற்கு ஒப்பாகும். திமுக காங்கிரஸுக்கும் வேண்டாம். தமிழகத்திற்கும் வேண்டாம்.