உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஸ்டாலின் துவக்கி வைத்த நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட எம்பி, எம்எல்ஏ | DMK MP MLA Clash | Theni |

ஸ்டாலின் துவக்கி வைத்த நிகழ்ச்சியில் மோதிக்கொண்ட எம்பி, எம்எல்ஏ | DMK MP MLA Clash | Theni |

நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று துவக்கி வைத்தார். அதன்பிறகு அனைத்து மாவட்டங்களிலும் முகாம்கள் துவங்கப்பட்டன. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன், தேனி திமுக எம்பி தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவின் வரவேற்பு பேனரில் எம்எல்ஏ மகாராஜன் படம் மட்டும் இடம்பெற்று இருந்தது. இதனால், எம்பி தங்க தமிழ்ச்செல்வன் கோபம் அடைந்தார். புரோட்டாகால் படி எம்பி படம்தானே பேனரில் முதலில் இருக்கணும். ஏன் இல்லாமல் போனது என்று கலெக்டர் முன்னிலையில் எம்எல்ஏ மகாராஜனை திட்டினார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. கலெக்டர் ரஞ்ஜீத் சிங் இருவரையும் சமாதானப்படுத்தினார். அதன்பிறகு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏவே வழங்கினார். தங்க தமிழ்ச்செல்வனை வழங்க விடவில்லை.

ஆக 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ