உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஈரோடு கிழக்கு திமுக கைக்கு போன உண்மை பின்னணி | DMK vs TN congress | erode east by election | erode

ஈரோடு கிழக்கு திமுக கைக்கு போன உண்மை பின்னணி | DMK vs TN congress | erode east by election | erode

ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க., போட்டியிடுவது, காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை திமுக ஒதுக்கியது. அதில் ஈரோடு கிழக்கு தொகுதியும் ஒன்று. அந்த தேர்தலில் வென்ற காங்கிரசின் திருமகன் ஈவெரா காலமானதால், 2023 பிப்ரவரி 27ல் இடைத்தேர்தல் நடந்தது. அதில் வென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் மறைந்ததால், இப்போது 2வது முறையாக இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஈரோடு கிழக்கு தொகுதியை, எங்களிடம் இருந்து திமுக பறிக்காது; இயற்கையாகவே, அது காங்கிரஸ் தொகுதிதான் என்று கூறியிருந்தார்.

ஜன 12, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை