உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இப்படியுமா இருக்கும் டாக்டர் ரூம்? அரசு ஆஸ்பிடலுக்குள் மது மோகம் | Doctors Suspended | Hospital Alco

இப்படியுமா இருக்கும் டாக்டர் ரூம்? அரசு ஆஸ்பிடலுக்குள் மது மோகம் | Doctors Suspended | Hospital Alco

இப்படியுமா இருக்கும் டாக்டர் ரூம்? அரசு ஆஸ்பிடலுக்குள் மது மோகம் | Doctors Suspended | Hospital Alcohol சிவகங்கை மாவட்டம் கல்ல செம்பனூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் இங்கே சிகிச்சைக்கு வருகின்றனர். 24 நேரமும் இயங்கி வருகிறது. வட்டார மருத்துவ அலுவலர் உட்பட நான்கு டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த டிசம்பர் 31ம் தேதி இரவு தயாளன் என்பவர் சிகிச்சைக்காக வந்துள்ளார். விபத்தில் காயமடைந்த அவரை நண்பர்கள் அழைத்து வந்திருந்தனர். அப்போது செம்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லை. தயாளன் நண்பர்கள் அங்கிருந்த அறைகளில் தேடி உள்ளனர். பிரசவ வார்டு, அவசர சிகிச்சை அறைகளுக்கு சென்றனர். அப்போது பிரசவ வார்டு அருகே டாக்டர்கள் ஓய்வு அறையில் மது பாட்டில் இருந்துள்ளது. அதன் அருகே அசைவ உணவு, நொறுக்கு தீனிகள் சிதறி கிடந்துள்ளது. அதனை செல்போனில் வீடியோ எடுத்து தயாளன் நண்பர்கள் வெளியிட்டனர். டாக்டர்கள் அறையில் மது பாட்டில்கள் இருந்தது சர்ச்சையானது. இது குறித்து மாவட்ட சுகாதார அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட்டார். கடந்த 31ம் தேதி பணியில் இருந்த டாக்டர்கள் 4 பேர் மது அருந்தியது உறுதியானது. பார்மசி பணியாளர் கமலக்கண்ணன் அவர்களுக்கு உதவியது தெரியவந்தது. இதையடுத்து ஐந்து பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அதே நாளில் பணியில் இருந்த நர்ஸ்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜன 03, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி