விளையாடிய குழந்தைகள் பாய்ந்து கடித்த தெருநாய்கள் | Dog bite | child injured | Dog attacked | Saidape
குழந்தையை கடித்த தெருநாய்கள் பாய்ந்து சென்று காப்பாற்றிய தாய் சென்னை சம்பவம் திக் திக் வீடியோ சென்னையில் சமீப காலமாகவே குழந்தைகளையும் சிறுவர்களையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சைதாப்பேட்டையில் 2 நாளில் 2 சம்பவங்கள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை ரங்கராஜபுரம் பகுதியில் வீட்டு முன் 2 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு குழந்தைக்கு ஒன்றரை வயது. இன்னொரு குழந்தைக்கு ஒன்னே முக்கால் வயதாகிறது. தெருவில் இப்படியும் அப்படியும் ஓடியாடி விளையாடும்போது அவ்வழியாக 2 நாய்கள் சென்றன. குழந்தைகளை பார்த்ததும் பாய்ந்து சென்று கடித்தன. ஒரு குழந்தையை நாய் கடித்ததும் அருகில் பேசிக் கொண்டிருந்த குழந்தைகளின் தாய்கள் ஓடி வந்து நாய்களை விரட்டியடித்து குழந்தையை காப்பாற்றினர்.