உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 1971ல் நடந்த போரை மறந்துவிட வேண்டாம் Don't forget | 1971 war | baloch leader| Pak Army-chief|

1971ல் நடந்த போரை மறந்துவிட வேண்டாம் Don't forget | 1971 war | baloch leader| Pak Army-chief|

இஸ்லாமாபாத்தில் வெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் உரையாற்றினார். பலூசிஸ்தான் மாநிலம் பாகிஸ்தானின் நெற்றியில் மின்னும் விளக்கு. அடுத்த பத்து தலைமுறைகளாலும் அதை பாகிஸ்தானிடம் இருந்து பிரிக்கமுடியாது என்று அவர் கூறிானர். பலூசிஸ்தானை தனி நாடாக்க கோருவோருக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி இவ்வாறு பேசினார். அவரது பேச்சுக்கு, பலூசிஸ்தான் தேசிய கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான சர்தார் அக்தர் மெங்கல் பதில் அளித்தார். இந்தியாவுக்கு எதிராக 1971ல் நடந்த போரில் பாகிஸ்தான் ராணுவம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. 90 ஆயிரத்துக்கு மேற்பட்ட ராணுவ வீரர்கள் சரண் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடைய ஆயுதங்கள் மட்டுமல்ல அவர்களுடைய பேண்ட்டுகளும் அங்கே தொங்கிக்கொண்டு இருக்கின்றன. பாகிஸ்தான் ராணுவம் வரலாறு மறதி நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. பாகிஸ்தான் தரும் தண்டனையை பலுசிஸ்தான் மக்கள் 10 தலைமுறைக்கு நினைவில் வைத்திருப்பார்கள் என்று நீங்கள் பேசுகிறீர்கள். ஆனால், வங்காளிகள் செய்ததை பாகிஸ்தான் ராணுவம் எத்தனை தலைமுறைகளாக நினைவில் வைத்திருக்கிறது என்பதை நீங்கள் சொல்ல வேண்டும். நீங்கள் பேன்ட்டை கழற்றிவிட்டு சரண் அடைந்தீர்கள். அதுவரை யாரும் அப்படி சரண் அடைந்தது இல்லை. பலுசிஸ்தான் மக்கள் 75 ஆண்டுக்கும் மேலாக பாகிஸ்தான் அரசின் அடக்குமுறைகளை தாங்கி வருகின்றனர். ராவல்பிண்டியில் இருந்து வரும் எந்த மிரட்டலும், அவர்களுடைய நினைவுகளையோ அல்லது அவர்களின் நீதிக்கான கோரிக்கைகளையோ ஒருபோதும் அழிக்காது என்று சர்தார் அக்தர் மெங்கல் கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் சூழலில், பாகிஸ்தானில் தனி நாடு கேட்கும் பலூசிஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஒருவர், பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு சவால் விட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மே 06, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை