பாக். சண்டை நிறுத்தம்; தானே முழு காரணம்: டிரம்ப் Donald Trump again claims credit on India - Pakista
நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து சென்றுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட நான் மிகப் பெரிய முயற்சி எடுத்துள்ளேன். கடந்த காலங்களில் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன். தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வந்ததில் அமெரிக்காவின் பங்களிப்பு மிக அதிகம். நான் தலையிடாமல் இருந்திருந்தால், போர் முடிவுக்கு வந்திருக்காது. அப்படி நடந்திருந்தால் அது மிகப் பெரிய போராக மாறியிருக்கும். மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கும். அனைத்தையும் விட முக்கியமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை நான் முடிவுக்கு கொண்டு வந்தேன். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை உடைய மிகப் பெரிய நாடுகள். அவர்கள் தங்களுக்குள் எப்படி சண்டையிட்டுக் கொண்டார்கள் என உலகம் அறியும்.