ஈரானுக்கு முற்றுப்புள்ளி: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை Iran Israel War |US Iran Conflict |Donald Trump
ஈரானுக்கும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா படைகளுக்கும் கடந்த மாதம் 28ஆம் தேதி போர் தொடங்கியது. இந்த போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதனால் கடும் கோபமடைந்த ஈரான், அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுமட்டுமல்லாமல், ஹார்மூஸ் ஜலசந்தியை மூடி வைத்து, அந்த வழியாக செல்லும் அமெரிக்க நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்களையும் ஈரான் குறிவைத்து தாக்கி வருகிறது. இதற்கிடையே ஈரான்-அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது; போரை முடிவுக்கு கொண்டுவர தயார் என அதிபர் டிரம்ப் கூறினார். ஆனால் அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வந்தது. போரில் அமெரிக்கா தோற்றுவிட்டது என்பதையே டிரம்பின் பேச்சு காட்டுகிறது; போர் தொடரும் எனவும் ஈரான் கூறியது. இந்த நிலையில், “ஈரான் என்னை உச்சத் தலைவராக்க விரும்பியது; ஆனால் நான்தான் அதை மறுத்துவிட்டேன்” என கூறி,ஈரான் மட்டுமின்றி அமெரிக்காவையும் அதிர வைத்திருக்கிறார், அதிபர் டிரம்ப்.. #Iran #Israel #USA #Trump #IranIsraelWar #MiddleEastCrisis #WorldNews #BreakingNews #WarUpdate #HormuzStrait #Geopolitics #MissileAttack #IranVsUS #GlobalTension #DonaldTrump #IranNews #IsraelNews #USPolitic