உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துப்பாக்கிசுடும் பயிற்சியில் இருந்து நீக்கப்பட்ட தாமஸ் மாத்யூ! | Donald Trump | Pennsylvania

துப்பாக்கிசுடும் பயிற்சியில் இருந்து நீக்கப்பட்ட தாமஸ் மாத்யூ! | Donald Trump | Pennsylvania

டிரம்பை சுட்டது எதனால்? காரணத்தை அலசும் போலீஸ்! அமெரிக்க அதிபர் வேட்பாளர் டெனால்டு டிரம்ப் சுடப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பென்சில்வேனியாவில் டிரம்ப் பிரச்சாரம் செய்யும்போது இந்த சம்பவம் நடந்தது. அவர் தற்போதைய அதிபர் பைடன் குறித்து பேசிக் கொண்டிருக்கும் போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேடையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மாடியில் இருந்து சிறிய ரக துப்பாக்கியால் தாமஸ் மேத்யூ என்பவர் சுட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய 20 வயது தாமஸ் மாத்யூவை, ரகசிய சேவை போலீசார் சம்பவ இடத்திலேயே சுட்டு கொன்றனர். டிரம்பின் வலது காதின் மேற்பகுதியில் தேட்டா உரசி சென்றதால் லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்ட டிரம்ப்புக்கு சிடி ஸ்கேன் பார்க்கப்பட்டது. காதில் சிறிய பாதிப்பு தான் என்பதால் டிரம்ப் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தான் இப்போது நலமாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தாமஸ் மாத்யூ குறித்து அமெரிக்க போலீசார் தீவிரமாக விசாரித்தனர். தாமஸ் தனியாக மன அழுத்தத்துடன் இருந்துள்ளார். பள்ளியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஜூலை 15, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ