உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அடுத்து என்ன நடக்க போகிறது அமெரிக்காவில்? | Trump | Truth Social Media | Illegal Immigration

அடுத்து என்ன நடக்க போகிறது அமெரிக்காவில்? | Trump | Truth Social Media | Illegal Immigration

அலறுது அமெரிக்கா! தேசிய அவசர நிலை பிரகடனம் கொத்தாக நாடு கடத்தும் டிரம்ப் டிஸ்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக களமிறங்கிய டிரம்ப் வெற்றி பெற்றார். வரும் ஜனவரியில் முறைப்படி அதிபராக பதவியேற்க உள்ளார். பொதுவாக அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்கிற கொள்கை உடையவர் டிரம்ப். முந்தைய ஆட்சி காலத்தின் போதே மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டி அகதிகள் அமெரிக்காவில் நுழைவதை தடுத்தார். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பை பிற நாட்டு மக்கள் அபகரிப்பதை தடுக்க பல நடவடிக்கை எடுத்தார். இப்போது டிரம்ப் மீண்டும் அதிபராகி இருக்கும் நிலையில் இந்த நடவடிக்கை இன்னும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 1 கோடிக்கு மேல் இருக்கலாம் என கூறப்படுகிறது. தேர்தல் பிரசாரத்தின் போது சட்டவிரோதமாக குடியேறிவர்களை விரட்டி அடிப்பேன் என தனது கொள்கையை டிரம்ப் கூறியிருந்தார். டிரம்ப் அரசின் எல்லை பாதுகாப்புத் துறை தலைவராக டாம் ஹோமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நவ 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை