உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / டிரம்ப் பின்வாங்கிய மர்மம் என்ன? ஷாக் ரிப்போர்ட் Donald Trump vs Kamala Harris | US Election debate

டிரம்ப் பின்வாங்கிய மர்மம் என்ன? ஷாக் ரிப்போர்ட் Donald Trump vs Kamala Harris | US Election debate

கமலா, என்னை அடுத்த டிபேட்டுக்கு கூப்பிடுகிறார். இனி நான் வரமாட்டேன் என்று அழுகாத குறையாக அலறுகிறார் டிரம்ப். ஒரே டிபேட்டில் அவரது கொட்டத்தை அடக்கி அதிபர் ரேஸில் சற்றே முந்தி இருக்கிறார் இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ். கமலாவுக்கு முன்பு வரை ஜோ பைடன் தான் அதிபர் வேட்பாளராக இருந்தார். பைடன் இருக்கும் வரை டிரம்ப் கை ஓங்கி இருந்தது. அடுத்த அதிபர் டிரம்ப் தான் என்று கிட்டத்தட்ட பைடன் சேர்ந்த கட்சியினரே முடிவு செய்யும் அளவுக்கு டிரம்பின் செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், டிபேட்டில் பைடனை தோற்கடித்து டிரம்ப் சம்பாதித்து வைத்திருந்த மொத்த இமேஜையும் டோட்டலாக டேமேஜ் செய்து விட்டார் கமலா ஹாரிஸ். இன்னொரு டிபேட்டே வேண்டாம் என்ற சொல்லும் டிரம்பின் கதறல் முடிவுக்கு என்ன காரணம்? டிபேட்டில் டிரம்பை கமலா முந்தியது எப்படி? டிரம்ப், கமலா வாங்கிய மார்க் எவ்வளவு? தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பதை பார்க்கலாம். உலகமே உற்றுநோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், துணை அதிபருமான கமலா ஹாரிஸ் களம் இறங்கி உள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை மக்கள் முன்பு அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக விவாதத்தில் தர்க்கம் செய்ய வேண்டும். யார் சிறப்பாக வாதிடுகிறார்கள் என்பதை மக்கள் நேரடியாக கவனிப்பார்கள். இதன் தாக்கம் ஓட்டுப்பதிவில் எதிரொலிக்கும். அப்படி தான் முதல் டிபேட்டில் அதிபர் பைடனும் மாஜி அதிபர் டிரம்ப்பும் மல்லுக்கட்டினர். டிரம்ப் வெளுத்து வாங்கினார். பைடனை ஆக்ரோஷமான கேள்விகளால் துளைத்தெடுத்தார். வயது முதிர்வால் பைடனால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. டிபேட்டிலேயே பைடன் சோர்ந்து போனார். மொத்த டிபேட்டும் ஒன்சைடாக டிரம்ப் பக்கம் சாய்ந்தது. பைடன் நின்றால் தோல்வி உறுதி என்று ஜனநாயக கட்சியினரே கொதித்தனர். அதன் பிறகு தான் அதிபர் வேட்பாளர் வாய்ப்பு கமலா ஹாரிசுக்கு போனது. தனதுக்கு பதில் கமலா போட்டியிடுவார் என்று அறிவித்து விட்டு பைடன் ஒதுங்கிக்கொண்டார். இப்படி பரபரப்பான சூழலில் அடுத்த டிபேட் பென்சில்வேனியாவில் நடந்தது. முதல் டிபேட் தந்த வெற்றி மிதப்பில் டிரம்ப் வந்தார். திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கமலா இருந்தார். டிபேட் சூடுபிடித்தது. 90 நிமிடம் அனல் பறக்க வாதம் நடந்தது. டிரம்ப் பைடனிடம் காட்டிய அதே ஆக்ரோஷத்தை கமலாவிடமும் காட்டினார். அவர் பேசியது: பைடன் ஆட்சியால் அமெரிக்க மண்ணின் மைந்தர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். மோசமான குடியேற்றத்தால் அமெரிக்காவில் பணவீக்கம் ஏற்பட்டு பொருளாதாரம் சரிந்தது. கோவிட்டை சிறப்பாக எதிர்கொண்டு வலுவான பொருளாதாரத்தை நான் உருவாக்கினேன். அடுத்த தேர்தலில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. பைடனின் தவறான கொள்கைகளை தான் கமலாவும் பின்பற்றி வருகிறார். அமெரிக்காவில் குடியேறுபவர்களால் வன்முறை அதிகரித்துள்ளது. அவர்கள் நம் வீடுகளை கைப்பற்றுகின்றனர். அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை தட்டிப்பறித்து விட்டனர். ஓட்டுக்காக சட்டவிரோத குடியேற்றத்தை பைடன் அனுமதித்தார். நான் வந்தால் மீண்டும் வேலை வாய்ப்பு பெருகும். பொருளாதாரம் மேம்படும். ரஷ்யா சென்று புடினிடம் பேசி உக்ரைன் போரை நிறுத்துவேன். நான் ஆட்சியில் இருந்தால் இஸ்ரேல்-ஹமாஸ் போர் மூண்டிருக்காது. கமலா பைடனை விட மோசமானவர். அவர் ஆட்சிக்கு வந்தால் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போய்விடும் என்று டிரம்ப் பேசினார். அவர் வைத்த குற்றச்சாட்டுகளை புள்ளி விவரத்துடன் கமலா தவிடுபொடி ஆக்கினார். விவாதத்தில் கமலா பேசியது: அமெரிக்க பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று டிரம்ப் கவலைப்படுகிறார். அதை சீரழித்ததே அவர் தான். அவர் தான் வர்த்தக போரை அறிமுகம் செய்தார். அவர் காலத்தில் சுகாதாரமும் பொருளாதாரமும் மோசமான நிலையில் இருந்தது. சீனாவின் ஆயுத வலிமைக்கு உதவியர் டிரம்ப். அமெரிக்காவில் தயாரித்த கருவிகளை சீனாவுக்கு விற்பனை செய்தார். அவருக்கு சீனா வெளிப்படையாக நன்றி சொன்னது. கோடீஸ்வரர்களுக்கும் பணக்காரர்களுக்கும் தான் டிரம்ப் வரிச்சலுகை வழங்கினார். நடுத்தர மக்களுக்கு என்ன செய்தார்?

செப் 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை