வரதட்சணை கொடுமை! தலைமறைவான பூபாலன் கைது | Madurai Police | Investigation
நொண்டி நொண்டி நடக்குறா! மனைவிக்கு செய்த கொடூரம் போலீஸ் ஏட்டின் ஆடியோ தன் மனைவியை கொடூரமாக தாக்கியதை கூறும் கணவனின் பேச்சை கேட்டு அவரது தங்கை ரசிக்கும் ஆடியோதான் இவை. திருமணம் ஆகி 7 ஆண்டுகள் கழித்தும் மதுரை தனியார் பள்ளி பெண் ஆசிரியைக்கு போலீஸ் கணவரால் நடந்த கொடுமைகள் காதால் கேட்க முடியவில்லை. தமிழகத்தில் சமீபத்தில் ரிதன்யா வழக்கு தொடங்கி வரதட்சணை கொடுமை தலை தூக்கி இருந்தாலும் இன்னும் இந்த அவலம் ஓய்ந்த பாடில்லை. அடுத்தடுத்த புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மதுரை அப்பன் திருப்பதி போலீஸ் ஸ்டேஷன் ஏட்டு பூபாலன் வயது 38. இவருக்கும் தேனியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை தங்க பிரியாவுக்கும் 2017ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.