பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி முர்மு | President Droupadi Murmu teacher role | Delhi
ஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஜனாதிபதியின் மலரும் நினைவுகள் ஜனாதிபதி திரவுபதி முர்மு, அரசியலுக்கு வருவதற்கு முன், ஒடிசாவின் ராய்ரங்பூரில் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார். அதன் பிறகு கவுன்சிலர், எம்எல்ஏ, அமைச்சர், ஜார்க்கண்ட் கவர்னர் என படிப்படியாக உயர்ந்தார். 2022ல் ஜனாதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில், டில்லியில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்ற முர்மு, 11ம் வகுப்பு மாணவர்களுடன் உரையாடினார். அவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பாடம் எடுத்தார். புவி வெப்பமயமாதல், அதனால் ஏற்படும் விளைவுகள், அதை தடுக்க நாம் கடைபிடிக்க வேண்டியவை குறித்து மாணவர்களுக்கு அவர் விளக்கினார். நில வளம், நீர் வளம், தூய காற்று ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விளக்கிய முர்மு, உலக சுற்றுச்சூழல் தினம் பற்றியும் பாடம் எடுத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு கற்பித்ததுடன் ஜனாதிபதி நிற்கவில்லை. அவர்களிடம் கேள்வியும் கேட்டு எந்தளவுக்கு பாடங்களை கவனித்தனர் என செக் செய்தார்.