/ தினமலர் டிவி
/ பொது
/ போதை கடத்தல் தாதா! யார் இந்த கஞ்சிபாணி இம்ரான்? | Drug | Methamphetamine | Narcotics Intelligence
போதை கடத்தல் தாதா! யார் இந்த கஞ்சிபாணி இம்ரான்? | Drug | Methamphetamine | Narcotics Intelligence
தமிழகத்தில் மெத் ஆம்பெட்டமைன் சர்வதேச கடத்தல் மன்னன் தொடர்பு சென்னை அரும்பாக்கம் தனிப்படை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் இணைந்து மெத் ஆம்பெட்டமைன் கடத்தல் கும்பலை சேர்ந்த 15 பேரை சமீபத்தில் கைது செய்தனர். அவர்களிடம் 5 நாட்டுத் துப்பாக்கிகள் 79 துப்பாக்கிக் குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. போதை கடத்தல் கும்பலிடம் துப்பாக்கி இருந்தது அதிர்ச்சியை தந்தது. முதல் கட்ட விசாரணையில் துாத்துக்குடியைச் சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் தம்பிராஜா தமிழகத்தில் உள்ள போதை கடத்தல்காரர்கள் மற்றும் ரவுடிகளுக்கு பீகாரில் தயாரிக்கப்படும் கட்டா என்ற நாட்டுத் துப்பாக்கிகளை விற்றது தெரியவந்தது.
ஜன 09, 2025