போதைபொருள் தயாரித்த திமுக நிர்வாகி மகன் உட்பட 7 பேர் கைது | Making drugs | College students arrest
போதை அழிவின் உச்சம் வீட்டிலேயே போதைபொருள் தயாரிப்பில் இறங்கிய மாணவர்கள்! சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் மெத்தபெட்டமைன் போதை பொருளை விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தீவிர கண்காணிப்பில் இருந்த போலீசார் கொடுங்கையூர் அருகே பின்னிநகர் மெயின் ரோடு பகுதியில் உள்ள பிரவீன் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டையே ஆய்வகம் போல மாணவர்கள் பயன்படுத்தியதும் அதில் போதைப் பொருள் தயாரித்து வந்ததும் தெரியவந்துள்ளது. அங்கு இருந்த பிரவீன் கிஷோர் ஞானப்பாண்டியன் நவீன் தனுஷ் பிளம்மிங் பிரான்சிஸ் ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் 6 பேருமே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதில் பிரவீன் பிரணவ் கிஷோர். நவீன் தனுஷ் ஆகிய 4 பேரும் ராமாபுரம் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்பதும் ஞான பாண்டியன் சென்னை தனியார் கல்லூரியில் வேதியியல் முதுகலை பட்டம் படிப்பதும் தெரிந்தது. சில நாட்களுக்கு முன் அருண் என்பவரிடம் இருந்து இந்த போதை பொருளை வாங்கி பயன்படுத்தி உள்ளனர். ஆனால், அது தரமில்லாமல் இருந்ததுடன் போலியானது என்பது தெரிந்ததால் நண்பர்கள் இணைந்து தாங்களாகவே போதைப் பொருளை தயாரிக்க முடிவெடுத்துள்ளனர்.