படகில் போதை கடத்திய 6 பாகிஸ்தானியர் கைது | Drugs Seized near Gujarat
குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில், சந்தேகத்திற்கு இடமான வகையில் பயணித்த படகை கடலோர காவல்படையினர் கண்காணித்தனர். அதில் போதை பொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், குஜராத் போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மூன்று பிரிவினரும் சேர்ந்து, நடுக்கடலில் அந்த படகை சிறை பிடித்தனர். அதில் சோதனையிட்டபோது, 80 கிலோ போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் மதிப்பு480 கோடி ரூபாய்.
மார் 12, 2024