கவர்மெண்ட் கைவிட்டாலும் கடவுள் விடமாட்டார்! கான்ஸ்டபிள் வீடியோ | DSP Sundaresan | icu
டிஎஸ்பி சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி! ஐசியூவில் அட்மிட் மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன். இவர் சில நாட்களுக்கு முன் சீருடையில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற காட்சிகள் வைரலாகியது. இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், உயர் அதிகாரிகள் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகின்றனர். மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன். தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறி இருந்தார். இந்த விவகாரம் குறித்து தஞ்சை மண்டல டிஐஜி ஜியாவுல் ஹக் மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் உட்பட 9 பேரிடம் விசாரணை நடத்தினார். மீடியாக்களுக்கு பேட்டி கொடுத்ததை சுட்டிக் காட்டி, சுந்தரேசனை உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்தார். இந்த சூழலில் இன்று திடீர் நெஞ்சுவலி காரணமாக சுந்தரேசன் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளார். ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டிஎஸ்பி சுந்தரேசன் நேர்மையானவர், லஞ்சம் வாங்காதவர் என அவருக்கு டிரைவராக இருந்த கான்ஸ்டபிள் செல்வம் பேசும் வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.