துபாய் விமானத்தில் இருந்து கிளம்பிய புகை: பயணிகள் ஷாக் | Dubai flight | Chennai airport | Smoke
சென்னை - துபாய் விமானம் கிளம்பும் நேரத்தில் புகை! ஏர்போர்ட்டில் பதட்டம் துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்றிரவு 8.15 மணிக்கு, சென்னை ஏர்போர்ட் வந்தது. அதே விமானம் மீண்டும் இரவு 10 மணிக்கு, சென்னையில் இருந்து துபாய் புறப்பட தயாரானது. 320 பயணிகள் அனைத்து கட்ட சோதனைகளும் முடிந்து, விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். அதேநேரம் விமானம் சுத்தப்படுத்தப்பட்டு, ஏரிபொருள் நிரப்பும் பணிகளும் நடந்தன. எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட திடீர் குளறுபடி காரணமாக, அளவுக்கு அதிகமாக நிரப்பிவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது விமானத்தின் எஞ்சின் சூடாகி புகை வர தொடங்கியது. விமானத்தில் இருந்து அதிகளவு புகை வெளியேறியதால் ஏர்போர்ட்டில் பதட்டம் ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த விமானிகள், துரிதமாக செயல்பட்டு விமான பொறியாளர் குழு உதவியுடன், கூடுதலாக நிரப்பிய எரிபொருளை வெளியேற்றினர்.. தீயணைப்பு வாகனம் மூலம், தண்ணீரை பீச்சி அடித்து விமான எஞ்சினில் ஏற்பட்ட வெப்பத்தை தணித்தனர். அதன் பிறகு இன்ஜினில் இருந்து வெளிவந்த புகையும் நின்றது. பி சி ஏ எஸ் எனப்படும், பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அதிகாரிகள், விமானத்தை முழுமையாக ஆய்வு செய்த பின்பே, விமானம் மீண்டும் இயக்கப்பட வேண்டும். அதுவரையில் விமானத்தில் பயணிகள் யாரும் ஏறுவதற்கு அனுமதி இல்லை என்று அறிவித்து விட்டனர். இதனால் விமானத்தில் பயணிக்க இருந்த 320 பயணிகளும், சென்னை ஏர்போர்ட் ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர்.