உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காட்பாடி வீட்டில் ED ரெய்டு; ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன் duraimurugan| mk stalin| tn cm| ED raid

காட்பாடி வீட்டில் ED ரெய்டு; ஸ்டாலினை சந்தித்த துரைமுருகன் duraimurugan| mk stalin| tn cm| ED raid

வேலூர் காட்பாடி அருகே காந்திநகரில் உள்ள வீட்டில் நீர்வள அமைச்சர் துரைமுருகன் அவரது மகனும் எம்பியுமான எம்பி கதிர் ஆனந்த் ஆகியோர் வசிக்கின்றனர். இந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி, அமைச்சரின் நம்பிக்கைக்கு உரிய திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன், அவரது உறவினர் தாமோதரன் ஆகிய 4 இடங்களில் சோதனை நடக்கிறது. 2019 லோக்சபா தேர்தலின்போது, வேலூரில் திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் இருந்து 11 கோடி ரூபாயை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அமலாக்கத்துறையும் விசாரித்து வரும் நிலையில், ரெய்டு நடக்கிறது. அமைச்சர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரம் வீட்டில் இருக்கிறார். 2 வக்கீல்கள் வந்து அவரை சந்தித்தனர். சுமார் அரைமணிநேரத்திற்கு பின் கிளம்பினர். அதன் பின், அமைச்சர் துரைமுருகன், தலைமை செயலகத்துக்கு சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். இச்சம்பவத்தையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ளே செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன. அமலாக்கத்துறை ரெய்டு பற்றி அமைச்சர் துரைமுருகனிடம் கேட்டபோது, உங்களுக்கு எவ்வளவு தெரியுமா? அதுமட்டும் தான் எனக்கும் தெரியும். யார் வந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. வீட்டில் யாரும் இல்லை. 2 வேலைக்காரங்க மட்டும் தான் இருக்கிறார்கள். சோதனை நடத்த வந்திருப்பது எந்த துறை அதிகாரிகள் என்று தெரியவில்லை என காரில் இருந்த படியே துரைமுருகன் பதிலளித்து விட்டு சென்றார்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை