உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடப்பாரை, சுத்தியை வைத்து கதவை உடைத்ததால் பரபரப்பு! ED Raid | Duraimurugan | Kathir Anand | DMK

கடப்பாரை, சுத்தியை வைத்து கதவை உடைத்ததால் பரபரப்பு! ED Raid | Duraimurugan | Kathir Anand | DMK

திமுக அமைச்சர் துரைமுருகன் மகனும் திமுக எம்பியுமான கதிர் ஆனந்தை குறி வைத்து காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ள அந்த வீட்டில் தான் துரைமுருகனும், அவரது மகனும் குடும்பத்துடன் வசிக்கின்றனர். அதிகாரிகள் ரெய்டுக்கு வந்த நேரம் வீட்டில் யாரும் இல்லை. அனைவரும் சென்னை வீட்டில் இருந்தனர். இதனால் 7 மணி நேரம் வீட்டிலேயே காத்திருந்து பின்னர் சோதனையை துவங்கினர். இந்த ரெய்டுக்கு காரணம் 2019 பார்லிமென்ட் தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட பணம் தான் என்று கூறப்படுகிறது.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி