உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமலாக்க அதிகாரிகள் சோதனையில் சிக்கியது என்ன | EDRaid | Duraimurugan | KathirAnand

அமலாக்க அதிகாரிகள் சோதனையில் சிக்கியது என்ன | EDRaid | Duraimurugan | KathirAnand

வேலூர் காட்பாடியில், நீர்வள அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும் கதிர் ஆனந்த் எம்பி ஆகியோருக்கு சொந்தமான வீடு, கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரி, துரைமுருகனின் பிஎட் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீ டு, அவரது உறவினரின் சிமென்ட் கிடங்கு ஆகிய 5 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அமைச்சர் துரைமுருகன் சென்னையிலும், கதிர் ஆனந்த் துபாயிலும் இருந்ததால் வீடு பூட்டப்பட்டு இருந்தது. காலையில் அவர்களது வீட்டுக்கு சென்ற அமலாக்க அதிகாரிகள் 7 மணிநேரம் வெளியே காத்திருந்தனர். அதன் பிறகு சாவி கொண்டுவரப்பட்டு சோதனையை தொடங்கினர். அதிகாலை வரை வீட்டில் சோதனை தொடர்ந்தது. சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். கதிர் ஆனந்த் எம்பிக்கு சொந்தமான கிங்ஸ்டன் இன்ஜினியரிங் கல்லூரியில் நேற்று காலை 8 மணிக்கு சோதனை தொடங்கியது. 2வது நாளாக இன்றும் அமலாக்க அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பாதுகாப்புக்காக, கல்லூரி வளாகத்தின் துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். கல்லூரியில் நடந்த ரெய்டில், சில ஆவணங்களும், பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜன 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை