உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கனடாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் குட்டு | EAM Jaishankar | Canada | Indian diplomats

கனடாவுக்கு அமைச்சர் ஜெய்சங்கர் குட்டு | EAM Jaishankar | Canada | Indian diplomats

இது தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் நேரடியாக குற்றம் சாட்டியதால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு சீர்கெட்டுள்ளது. கனடாவில் உள்ள இந்திய தூதர் உட்பட 6 பேரை அந்நாட்டு அரசு வெளியேற்றி உள்ளது. இந்தியாவும் கனடா தூதர்களை வெளியேற்றி பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: கனடாவுக்கான இந்திய துாதரிடம் போலீஸ் விசாரணை நடத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இதை தொடர்ந்து நம் துாதரை நாங்கள் திரும்ப பெற்றோம். இந்தியாவுக்கான துாதரை அழைத்து அந்நாட்டு அரசு கண்டிப்பதை பேச்சு சுதந்திரமாக நாம் கருத வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். அதே நேரம் இந்தியாவுக்கான கனடா துாதரை நாம் அழைத்து கண்டனத்தை தெரிவித்தால் அதை வெளிநாட்டு தலையீடு என்கின்றனர். கனடாவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களை மட்டுமே இந்திய தூதர்கள் கவனிக்கின்றனர். இது கூட அவர்களுக்கு பிரச்னை இருப்பது போல் தெரிகிறது. தூதர்களை கையாள்வதில் கனடா பாசாங்குதனம் காட்டுகிறது. இதை இரட்டை வேடம் என்று கூறுவதை கூட மிகவும் மென்மையான வார்த்தையாக கருதுகிறேன் என அவர் கூறி உள்ளார்.

அக் 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை