உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துருக்கியில் நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனை Earthquake magnitude 6.1 Turkey Sindirgi Balikesir pro

துருக்கியில் நிலநடுக்கம்: சோதனை மேல் சோதனை Earthquake magnitude 6.1 Turkey Sindirgi Balikesir pro

துருக்கி நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர். மேற்கு துருக்கியில் உள்ள பாலிகெசிர் Balikesir மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10.50 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவானது. Sindirgi சிந்திர்கி என்ற பகுதியை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 6 கிலோ மீட்டர் ஆழத்தில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வால் சிந்திர்கி நகரில் ஏராளமான கட்டடங்கள் குலுங்கின. வரிசையாக 3 கட்டடங்கள் இடிந்தன. 2 மாடி கட்டடத்தில் இயங்கிவந்த பெரிய கடையும் இடிந்தது. நிலநடுக்கம் காரணமாக, தலைநகர் இஸ்தான்புல், புர்சா, மனிசா, இஸ்மிர் உள்ளிட்ட துருக்கியின் பல மாகாணங்களில் கடும் அதிர்வுகள் உணரப்பட்டன. Istanbul, Bursa, Manisa, Izmir நிலநடுக்கம் ஏற்பட்டதும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவந்தனர். சாலைகள், தெருவெங்கும் மக்கள் அச்சத்துடன் நின்று கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்யத் துவங்கியது. ஆனாலும் வீட்டுக்குள் செல்ல பயந்து கொண்டு மழையிலேயே நின்றனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகள் துரித கதியில் செயல்பட்டு, பள்ளிகள், மசூதிகள், ஸ்டேடியங்கள், விளையாட்டு மைய கட்டடங்களில் மக்களை தங்க வைத்தனர். சிந்திர்கி நகரில் இடிந்து விழுந்த 4 கட்டடங்களும் கடந்த முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது விரிசல் விட்ட கட்டடங்கள். அதனால் அங்கு யாருமில்லை. உயிரிழப்பும் இல்லை என, துருக்கி உள்துறை அமைச்சர் அலி எர்லிகாயா கூறினார். நிலநடுக்கத்தால் 22 பேர் காயமடைந்ததாக பாலிகெசிர் மாகாண கவர்னர் இஸ்மாயில் தெரிவித்தார். ஆனால், கட்டடம் இடிந்து யாரும் காயமடையவில்லை. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியதும் மக்கள் பயந்து போய் இங்குமங்கும் ஓடினர். அந்த பதற்றத்தில் கீழே விழுந்தும், தள்ளுமுள்ளில் சிக்கியும்தான் இந்த 22 பேரும் காயமடைந்துள்ளனர். ஆனாலும் எங்காவது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா? என அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் துருக்கியில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது ஒருவர் இறந்தார். 20க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தனர் அதன்பிறகு, பாலிகெசிர் மாகாணத்தில் தொடர்ச்சியாக நில அதிர்வுகள் ஏற்பட்டவண்ணம் உள்ளது. துருக்கியின் பூகோள அமைப்பு காரணமாக, அங்கு அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. 2023 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், தெற்கு துருக்கியும், அதை ஒட்டிய வடக்கு சிரியாவும் பேரழிவை சந்தித்தது. லட்சக்கணக்கான கட்டிடங்கள் இடிந்தது. 59,000 பேர் பலியானார்கள். #Earthquake #Turkey #Sindirgi #Balikesir #Magnitude6_1 #NaturalDisaster #HeavyRain #Injured #EmergencyResponse #RoadSafety #DisasterRelief #SeismicActivity #WeatherImpact #CommunitySupport #RescueEfforts #TurkeyNews #EarthquakeAwareness #SafetyFirst #HumanitarianAid

அக் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை