பல வீடுகளில் மூன்று மடங்குக்கு மேல்; இனி உஷாரா இருங்க | EB Bill | Electricity | TNEB | Low Voltage
ஜூலையில் வழக்கத்தை விட அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக பல வீடுகளின் உரிமையாளர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
9.60 லட்சம் வீடுகளில் மே மாதத்தை விட அதிக மின் கட்டணம் வந்துள்ளது.
அதில் 3.70 லட்சம் வீடுகளில் மூன்று மடங்குக்கு மேல் பில் எகிறி உள்ளது.
இதற்கு லோ வோல்டேஜ் பிரச்னையும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து அதன் திறனுக்கு ஏற்ப, எத்தனை வீடுகளுக்கு சப்ளை செய்யப்பட வேண்டுமோ அந்த எண்ணிக்கையில் மட்டுமே வினியோகம் செய்யப்பட வேண்டும்.
அதை விட அதிக வீடுகளுக்கு மின் வினியோகம் செய்தால் லோ வோல்டேஜ் பாதிப்பு ஏற்படும்.
இந்த பிரச்னை பல இடங்களில் காணப்படுகிறது.
இந்த நேரத்தில் வீடுகளில் ஃபேன் , மிக்ஸி, மோட்டார் பம்ப் உள்ளிட்ட சாதனங்கள் இயக்க கூடுதல் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
சராசரியாக 10 சதவீதம் வரை கூடுதலாக பயன்படுத்தப்படும் நிலை ஏற்படுகிறது.
அதற்கு ஏற்ப மின் கட்டணமும் அதிகரிக்கும்.
மின் கட்டணம் அதிகம் வந்துள்ள வீடுகளின் மீட்டர்களை ஆய்வு செய்வதுபோல்,
அந்த இடங்களில் உள்ள மின் வினியோக சாதனங்களையும் ஆய்வு செய்ய உள்ளோம்.
பிரச்னை இருந்தால் புதிய டிரான்ஸ்பார்மர் நிறுவுவது உள்ளிட்ட பணிகளை செய்ய உள்ளோம் என்றார்.
#EBBill | #Electricity | #TNEB | #LowVoltage | #PowerSupply | #Transformer | #ElectricityBoard