பில்லை பார்த்து மனம் நொந்த மக்கள் காரணம் இது தான்! | EB Bill | Electricity | TNEB
வீடுகளில் இரு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. ஜூலையில் வழக்கத்தை விட அதிக மின் கட்டணம் வந்ததாக பலர் புகார் தெரிவித்தனர். 9 லட்சம் வீடுகளில் மே மாதத்தில் செலுத்தியதை விட அதிக மின் கட்டணம் வந்திருப்பதும், 3.70 லட்சம் வீடுகளில் மூன்று மடங்குக்கு மேல் கட்டணம் வந்திருப்பதும் கண்டறியப்பட்டது. அங்கு பொறியாளர்கள், கணக்கு பிரிவு அதிகாரிகள் மறுஆய்வு செய்ய மின் வாரியம் உத்தரவிட்டது. ஒரு அதிகாரிக்கு 25 முதல் 150 இணைப்புகளில் ஆய்வு செய்ய மின் இணைப்புகள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆய்வு வெள்ளிக் கிழமை தொடங்கியது. நேற்று வரை 1.75 லட்சம் மின் இணைப்புகளில் மறு ஆய்வு செய்யப்பட்டதில், 1,300 வீடுகளில் தவறாக கணக்கு எடுக்கப்பட்டதால் அதிக மின் கட்டணம் வந்திருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வீடுகளில், மின் கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. #EBBill | #Electricity | #TNEB | #PowerSupply | #Transformer | #ElectricityBoard | #MeterReading