MSME நிறுவனங்களை நசுக்கும் மின் கட்டண உயர்வு | EB Traffic | Coir Factories | Coimbatore
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிகம் உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் 3.16 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் யூனிட்டிற்கு, 15 காசு முதல், 41 காசு வரை அதிகரித்துள்ளது. வீடுகளுக்கான கட்டண உயர்வை அரசு ஏற்றதால், அந்த பிரிவுக்கு கூடுதல் செலவு ஏற்படாது. அதேநேரத்தில், தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் மின் கட்டணத்துடன் சேர்த்து வசூலிக்கப்படும், நிலை கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. குடிசை தொழில், குறுந்தொழில்களுக்கு, 500 யூனிட் வரை யூனிட், 4.80 ரூபாயாக இருந்த கட்டணம், 4.95 ரூபாயாகவும், 500 யூனிட் மேல், 6.95 ரூபாயாக இருந்த கட்டணம், 7.15 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதனால் MSME எனப்படும் சிறு,குறு தொழில் நிறுவனங்கள் கடுமையான பதிப்பை எதிர்கொண்டுள்ளன. ஏற்கனவே கடந்த முறை மின் கட்டணம் உயர்ந்தபோது கிராமப்புறங்களில் இயங்கி வந்த பல தென்னை நார் உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டது. தற்போதைய மின் கட்டண உயர்வால் 50 சதவீத தென்னை நார் தொழிற்சாலைகள் மூடுவிழா காணும் என்கின்றனர் தொழில் துறையினர்.