மேற்குவங்கம், மகாராஷ்ட்ரா ஹரியானா நிலை என்ன? | GDP | Tamil Nadu | South States | GDP India
நாட்டின் வளர்ச்சியில் பங்கு தென்மாநிலங்கள் டாப் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து பிரதமருக்கு ஆலோசனை சொல்லும் பொருளாதார ஆலோசனை குழுவின் உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: ஜிடிபி எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா முக்கிய பங்கு வகிக்கின்றன. 1991ல், இந்த மாநிலங்களின் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட குறைவாக இருந்தது. ஆனால் பொருளாதார தாராளமய கொள்கைகள் காரணமாக இம்மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளன. மார்ச் 2024-ல் இந்த மாநிலங்கள் நாட்டின் ஜிடிபியில் 30 சதவீத பங்களிப்பை அளித்துள்ளன. தொழில்நுட்ப துறையில் வளர்ச்சி அடைந்து வரும் கர்நாடகாவும், தொழில் மையங்கள் அதிகம் கொண்ட தமிழ்நாடும் முக்கிய பங்கு வகிக்கின்றன.