உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ₹18 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளதாக தகவல்! Prawn Farming | Export | USA Tax | Tamiln

₹18 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளதாக தகவல்! Prawn Farming | Export | USA Tax | Tamiln

இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்க விதித்த 50 சதவீத வரிவிதிப்பால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் இறால் உற்பத்தி தொழிலும் ஒன்று. அமெரிக்க வரி விதிப்பால் இந்தியா முழுவதும் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளது. தமிழகத்தில் விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இறால் குஞ்சு உற்பத்தி அதிகளவில் நடக்கிறது. அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் மட்டும் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இறால்கள் தேங்கி உள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆக 29, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sathiesh
செப் 04, 2025 11:21

அப்படி இருந்தும் மார்கெட்டில் கிலோ ₹400 க்கு தான் விற்கிறது. விலை சற்று குறைந்தால் உள்ளூரிலேயே டிமாண்ட் அதிகரிக்கும். ஏற்றுமதி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி