/ தினமலர் டிவி
/ பொது
/ உறவினர் வீட்டில் இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல்! | ECR | ECR Car Chase Viral | ECR Car Seized
உறவினர் வீட்டில் இளைஞர்களின் 2 கார்கள் பறிமுதல்! | ECR | ECR Car Chase Viral | ECR Car Seized
ஈசிஆரில் பெண்களை துரத்திய கார்கள் தாம்பரத்தில் சிக்கியது! சென்னை கானத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுடன் 25ம் தேதி இரவு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திமுகவின் கொடி கட்டிய சொகுசு காரில் வந்த 6க்கும் மேற்பட்ட இளைஞர்கள் முட்டுக்காடு அருகே நடுரோட்டில் காரை குறுக்காக நிறுத்தினர். அந்த பெண்கள் வந்த காரை தாக்கும் செயலிலும் ஈடுபட்டனர். பதற்றமடைந்த பெண்கள் காரை பின்னோக்கி இயக்கி அங்கிருந்து தப்பி சென்றனர். அப்பெண்கள் எடுத்த மற்றும் அங்கே சிசிடிவியில் பதிவான இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலானது.
ஜன 30, 2025